கோலாலம்பூர், நவம்பர்.07-
அம்னோவில் மீண்டும் இணைவதா? இல்லையா? என்பது குறித்து பொருத்தமான நேரத்தில் தாம் அறிவிக்கவிருப்பதாக அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அம்னோவிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் கட்சியில் மீண்டும் சேர்வது தொடர்பில் கைரியின் நிலைப்பாடு இன்னமும் புதிராகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்னோ தலைமையகம் வீற்றிருக்கும் கோலாலம்பூர் உலக வாணிப மையக் கட்டடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கைரி, அம்னோவில் இணைவது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றார்.
முன்னதாக, உலக வாணிப மையக் கட்டடத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்காக தேசிய கல்வி மீதான வட்ட மேஜை கலந்துரையாடல் நிகழ்வில் கைரி கலந்து கொண்டு பேசினார்.








