பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ள பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, தனது வேட்பாளர்களை, ஒற்றுமை வேட்பாளர்கள் என்று அழைக்கும் என்று மாநில முதலமைச்சரும், பக்காத்தான் ஹராப்பான் மாநில தலைவருமான சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் வரும் ஆகஸ்ட் முதல் தேதி 40 தொகுதிகளின் வேட்பாளர்களின் அறிமுகம் நடைபெறவிருப்பதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார். அதேவேளையில் அன்றைய தினம் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்படும் என்று பினாங்கு பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


