தெமர்லோ,செப்டம்பர் 14-
பாஸ் கட்சித் தலைவர்கள், பெண்களுடன் கைக்குலுக்கும் சம்பவங்களை அடிக்கடி காணும் சூழ்நிலையில் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவது குறித்து பாஸ் கட்சி மாநாட்டில் அதன் உறுப்பினர் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சில தலைவர்கள், Karaoke நிகழ்விலும் பங்கேற்கின்றனர். ஆனால், அவர்களின் நடவடிக்கைகள், பாஸ் கட்சியின் உலமாக்களால் தற்காக்கப்படுகின்றன என்று அந்த ஏமாற்றம் தெரிவித்தார்.
ஹாஷிம் போன்ற பழங்காலத் தலைவர்கள் ஜோகெட் நடனம் ஆடியதற்காக அவர்களின் உறுப்பினர் தகுதியையே நீக்கம் செய்த வரலாற்றை பாஸ் கட்சி கொண்டுள்ளது. ஆனால், தலைவர்களின் இத்தகைய செயல்களுக்கு தற்போது எதிர் நடவடிக்கை எடுக்கப்படாதது, பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று பெர்லிஸை சேர்ந்த பாஸ் பேராளர் முகமது சைஃபிசி சைடன் என்பவர் வாதிட்டார்.
பாஸ் தலைவர்கள் எப்போதுமே மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரமாக திகழ வேண்டும் என்று அந்த பேராளர் வலியுறுத்தினார்.








