அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் டிஏபி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் டிஏபி 19 இடங்களில் போட்டியிடுகிறது.
இதில் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி மற்றும் சதிஷ் முனியாண்டி உட்பட 7 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. டாக்டர் இராமசாமி, கடந்த மூன்று தவணைக்காலம் தற்காத்து வந்த பிறை சட்டமன்றத் தொகுதியில் ஏக்கோ வெல் டிவோலோப்மன் குருப் பிஆர்ஃபட் டின் முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜு போட்டியிடுகிறார்.
அதேவேளையில் டாக்டர் இராமசாமியின் உதவியாளரான சதீஷ் முனியாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் கே.குமரன் என்ற புதிய வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். டிஏபி யின் பலம் பொருந்திய கோட்டையான படாங் கோத்தா வில் பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யியோவ் போட்டியிடுகிறார். பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ, தமது டத்தோ கெராமாட் தொகுதியை தற்காத்துக்கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார்.
பகான் நாடாளுமன்ற உறுப்பினரும், டிஏபி தலைவருமான லிம் குவான் எங், ஆயிர் புத்தே தொகுதியில் போட்டியிடுகிறார். டிஏபி வேட்பாளர்கள் பெயர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் இன்று மாலையில் அறிவித்தார்.
19 வேட்பாளர்களில் 15 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
