Sep 12, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா
அரசியல்

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

Share:

கடந்த 10 ஆண்டுகளாக திரங்கானு மாநில பெர்சாத்து கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ரஸாலி இட்ரிஸ், அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

எனினும், தனது ராஜினாமாவிற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.

கடந்த ஜூலை 16-ஆம் தேதி, தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசீனுக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அந்த ராஜினாமாவை ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்பது குறித்து கட்சித் தலைமையகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ரஸாலி இட்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாராங் தொகுதி பெர்சாத்து தலைவராக தாம் வகிக்கும் பதவியிலிருந்தும் வரும் செப்டம்பர் மாத மையப் பகுதியில் விலகவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மாநிலத் தலைவர் மற்றும் பிரிவு தலைவர் பதவிகளிலிருந்து மட்டுமே விலகுவதாகவும், கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து நீடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்