கோலாலம்பூர், செப்டம்பர்.08-
அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளரின் பெயரைப் பாஸ் கட்சி முன்மொழியலாம் என்று அந்தக் கூட்டணியின் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
பாஸ் கட்சி அவ்வாறு முன்மொழியுமானால், அது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்க முடியும் என்று பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் குறிப்பிட்டார்.
பெர்சத்து கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளர் முகைதீன் யாசின் என்று அறிவித்து விட்டது மூலம் அந்தக் கட்சி அவசரப்பட்டு விட்டதாகக் கூறப்படுவதை அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டாக்டர் யாட்ஸீல் யாகோப் நிராகரித்தார்.
எனினும் அது குறித்து தீர்க்கமாக முடிவு செய்யப்படுவது பெரிக்காத்தான் நேஷனலின் உச்சமன்றக் கூட்டம்தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.