Jun 7, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தலில் ஜசெக 17 தொகுதிகளில் போட்டியிடும் - அந்தோணி லோக் அறிவிப்பு
அரசியல்

ஜோகூர் தேர்தலில் ஜசெக 17 தொகுதிகளில் போட்டியிடும் - அந்தோணி லோக் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.07-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஜசெக கட்சி மொத்தம் 17 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் ஜசெக மொத்தம் 14 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக மூன்று புதிய தொகுதிகளில் களம் காணவுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக், கடந்த 2022-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற 10 தொகுதிகளையும் ஜசெக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு போட்டியிடும் என்றும், அப்போது தோல்வியடைந்த நான்கு தொகுதிகளான பெகோக், யோங் பெங், பாலோ மற்றும் பெக்கான் நாநாஸ் ஆகியவற்றில் மீண்டும் வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இதற்கு முன்பு போட்டியிடாத மூன்று புதிய தொகுதிகளிலும் ஜசெக களம் காணவுள்ளதாகவும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதனுடன் தொடர்புடைய மற்றொரு தொகுதி குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அந்தத் தொகுதி தொடர்பான முடிவு பிகேஆர் மற்றும் அமானா கட்சிகளுக்கிடையிலான ஆலோசனைகள் முடிந்த பின்னர் அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பெர்சாத்துவுடனான எதிர்கால அரசியல் உறவு குறித்து நாளை முக்கிய முடிவு - ஹாடி அவாங் அறிவிப்பு

பெர்சாத்துவுடனான எதிர்கால அரசியல் உறவு குறித்து நாளை முக்கிய முடிவு - ஹாடி அவாங் அறிவிப்பு

பாரிசான் கூட்டணியுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்: பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு அன்வார் அறிவுறுத்தல்

பாரிசான் கூட்டணியுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்: பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு அன்வார் அறிவுறுத்தல்

துங்கு முஹ்ரிஸ் பதவி நீக்கம் முறையற்றது: சைட் இப்ராஹிம் விமர்சனம்

துங்கு முஹ்ரிஸ் பதவி நீக்கம் முறையற்றது: சைட் இப்ராஹிம் விமர்சனம்

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் – ஸாஹிட் ஹாமிடி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் – ஸாஹிட் ஹாமிடி