Jun 7, 2026
Thisaigal NewsYouTube
பெர்சாத்துவுடனான எதிர்கால அரசியல் உறவு குறித்து நாளை முக்கிய முடிவு - ஹாடி அவாங் அறிவிப்பு
அரசியல்

பெர்சாத்துவுடனான எதிர்கால அரசியல் உறவு குறித்து நாளை முக்கிய முடிவு - ஹாடி அவாங் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.07-

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கிடையேயான எதிர்கால அரசியல் உறவு குறித்து நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.

இன்று கோலாலம்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் ஈரான் – இஸ்ரேல் போர் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இறைவன் அருளால் நாளை, திங்கட்கிழமை இரவு, நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவானது, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த மாதம் மாராங், Rusila-வில் நடைபெற்ற சொற்பொழிவு ஒன்றில் கலந்து கொண்ட ஹாடி அவாங், பெர்சாத்துவுடனான கூட்டணியை பாஸ் கட்சி மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அடுத்த பொதுத் தேர்தலில் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான அக்கூட்டணியின்றி, பாஸ் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் அம்னோவுடன் இணைந்து செயல்பட பாஸ் கட்சிக்கு அம்னோ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்

பாரிசான் கூட்டணியுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்: பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு அன்வார் அறிவுறுத்தல்

பாரிசான் கூட்டணியுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்: பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு அன்வார் அறிவுறுத்தல்

ஜோகூர் தேர்தலில் ஜசெக 17 தொகுதிகளில் போட்டியிடும் - அந்தோணி லோக் அறிவிப்பு

ஜோகூர் தேர்தலில் ஜசெக 17 தொகுதிகளில் போட்டியிடும் - அந்தோணி லோக் அறிவிப்பு

துங்கு முஹ்ரிஸ் பதவி நீக்கம் முறையற்றது: சைட் இப்ராஹிம் விமர்சனம்

துங்கு முஹ்ரிஸ் பதவி நீக்கம் முறையற்றது: சைட் இப்ராஹிம் விமர்சனம்

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்