Apr 14, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தானுக்கு தலைமை வகிக்க பாஸ் கட்சியின் மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளோம்: தக்கியுடின்
அரசியல்

பெரிக்காத்தானுக்கு தலைமை வகிக்க பாஸ் கட்சியின் மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளோம்: தக்கியுடின்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பொறுப்பிற்கு, பாஸ் கட்சி ஏற்கனவே ஒரு மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கூட்டணியின் அரசியலமைப்பின்படி, இறுதி முடிவானது பெரிக்காத்தான் உச்ச மன்றத்தால் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் நேற்று இரவு கோத்தா பாருவில் செய்தியாளர்களைச் சந்தித்த தக்கியுடின் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், உச்ச மன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை, அந்த தலைவரின் அடையாளத்தை வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஸ் உச்ச மன்றக் கூட்டமானது பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News