Dec 13, 2025
Thisaigal NewsYouTube
கட்சி நிதியைத் திருடினேனா? - மகாதீரின் குற்றச்சாட்டிற்கு முகைதீன் மறுப்பு
அரசியல்

கட்சி நிதியைத் திருடினேனா? - மகாதீரின் குற்றச்சாட்டிற்கு முகைதீன் மறுப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.13-

கட்சி நிதியைத் திருடி, வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமாட் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளைப் பெர்சாத்து கட்சியின் தலைவர் முஹிடின் யாசீன் கடுமையாக மறுத்துள்ளார்.

மகாதீரின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறியுள்ள முஹிடின், தாம் கட்சியின் நிதியை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை என இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்கு வரும் நிதிகள் அனைத்தும் அதன் அதிகாரப்பூர்வக் கணக்குகளில் முறையாகப் பராமரிக்கப்படுவதாகவும், பொருளாளரால் அவை வெளிப்படையான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் முஹிடின் தெரிவித்துள்ளார்.

இது போல் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதற்கு முன்னர், மகாதீர் தன்னிடம் அது குறித்துக் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் என்றும் முஹிடின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மகாதீருடன் பலமுறை தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடத்தியும் கூட, இது பற்றி அவர் தன்னிடம் பேசியதில்லை என்றும் முஹிடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News