Jan 20, 2026
Thisaigal NewsYouTube
மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் சிலாங்கூரை தக்க வைத்துக் கொள்ள முடியும்
அரசியல்

மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் சிலாங்கூரை தக்க வைத்துக் கொள்ள முடியும்

Share:

விரைவில் நடைபெற விருக்கும் சிலாங்கூர் மாநில சட்ட மன்றத் தேர்தலில் குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இடங்களை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் பெற முடியும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 தொகுதிகளில், 50 க்கும் மேற்பட்ட இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமது ஐந்து ஆண்டு காலத் தவணையின், ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் ஷாரி இதனை குறிப்பிட்டார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் துருப்புச் சீட்டாக விளங்குபவர்கள் வாக்காளர்களாக இருந்தாலும், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும், இதற்கான வியூகங்கள் குறித்து பக்கத்தான் தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் அடுத்த சில தினங்களில் விவாதிக்கவுள்ளதாகவும் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

புதிய கூட்டணிக் கட்சிகளுடன் கடந்த 2018ஆம் ஆண்டு அடைவு நிலையை மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதுடன் வரும் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News