நாளை மறுநாள் நடைபெறவிருக்கம் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் அது தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் முன்வைத்த அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று அந்த கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் உறுதி கூறியுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல், சிலாங்கூர் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாது. தற்போது மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தாமதமின்றி தனது வாக்குதிகளை தமது தலைமையிலான கூட்டணி நிறைவேற்றும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார். மூன்று தவணைக்காலம் ஆட்சி செய்து வரும் பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து சிலாங்கூரை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் 200 கோடி வெள்ளி மதிப்பிலான பரிவுமிக்க பொருளாதாரத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும். பெரிக்காத்தான் நேஷனலினால் நியமிக்கப்படக்கூடிய மந்திரி பெசார், மாநில மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதீத முக்கியத்தவம் அளிப்பார் என்றும் முகைதீன் குறிப்பிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்றத்தில் காலி இடங்கள் மட்டுமே நிரப்பப்படும்

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்


