கோத்தா கினபாலு, நவம்பர்.15-
சபா சட்டமன்றத் தேர்தலில் மாநில ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு டத்தோ ஶ்ரீ ஷாபி அஃப்டாலின் வாரிசான் கட்சியுடன் பாரிசான் நேஷனல் ரகசிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவதை அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் மாநில தேர்தலுக்குப் பிறகு வாரிசானுடன் சேர்ந்து சபா மாநிலத்தில் ஆட்சியை நிறுவதற்கு பாரிசான் நேஷனல் இத்தகையத் திட்டம் கொண்டு இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
இது தொடர்பதாக வாரிசான் கட்சித் தலைவர்களுடன் பாரிசான் நேஷனல் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தியது இல்லை என்று இன்று கோத்தா கினபாலுவில் செய்தியாளர்களிம் பேசிய அஹ்மாட் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.








