கோலாலம்பூர், டிச.13-
மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு அமெரிக்க கோடீஸ்வரரும், யூக நாணய சந்தை வர்த்தகருமான ஜார்ஜ் சோரோஸ் மகன், அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாடுகளின் ஒருங்கிணைந்த இந்த சதி முயற்சியில் ஒரு பகுதியாக ஜார்ஜ் சோரோஸ் மகன் அலெக்ஸ் சோரோஸ் இருந்துள்ளார் என்று தமக்கு எதிரான 1எம்.டி.பி. வழக்கு விசாரணையில் நஜீப் தமது தற்காப்பு வாதத்தில் இதனை குறிப்பிட்டார்.








