நவ. 24-
ஜோகூர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான வேலை நாட்களை நான்கரைநாட்கள் வரையறை எனும் முன்மொழிவு குறித்து மாநில அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசின் பிரதமர் துறையின் சட்ட, நிறுவன சீர்திருத்தப் பிரிவுக்கான அமைச்சர், அசலினா ஒத்மான் சைத் கூறுகையில், இந்த முடிவை எடுப்பதற்கு முன் மாநில அரசாங்கம் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் என்று கூறினார்.
இந்த முன்மொழிவு குறித்து மேலும் விவரங்கள் இல்லாததால், தாம் மேலும் கருத்துரைக்க இயலவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், மாநில அரசாங்கம் இந்த முடிவுக்கு வர கட்டாயமான காரணங்கள் இருக்கும் என்று அவர் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேலை நேரங்கள் மாறி வருகின்றன என்றும், பலர் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்த முன்மொழிவு, பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, குறைந்த வேலை நேரம் தொழிலாளர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் ஆக்கத்தித்திறனை அதிகரிக்கிறது. மேலும், இது நிறுவனங்களுக்கும் நன்மை பயக்கும் என்றார் அவர்.








