Dec 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்

Share:

சிலாங்கூர் மாநில 22 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிக விரைவில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு தலா 50 ஆயிரம் வெள்ளியை மாநில அரசு வழங்கும் என அவர் கூறினார்.

தாம் வாய்மொழியாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அவர்களிடம் இருந்து இன்னும் விண்ணம் வரவில்லை. எனவே, தம்மை அவர்கள் நேரில் சந்தித்து இவ்விவகாரம் குறித்து கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டுக்கான இந்த நிதி ஒதுக்கீட்டை தேவையின் காரணமாக முன்னதாகவே கொடுப்பதாகவும், அதனை அவர்கள் திட்டமிட்டு மக்கள் நலனுக்காகச் செலவிடுவர் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதே சமயம், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டை முடிவு செய்ய ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்