Apr 24, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் தேர்வில் 6 ஏக்கள் பெற்ற மாணவிக்கு அரிச்சந்திரன் உதவி
அரசியல்

எஸ்பிஎம் தேர்வில் 6 ஏக்கள் பெற்ற மாணவிக்கு அரிச்சந்திரன் உதவி

Share:

எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தும், மெட்ரிக்குலேசன் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைக்காமல் அவதிக்குள்ளான மாணவிக்கு, ​ ​லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி.அரிச்சந்திரன் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் அந்த மாணவிக்கு கல்விக்கான முழு உதவித் தொகையுடன் உயர்கல்வித் தொடர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.

கூலிம் செயி​ண்ட அன்னே கான்வென்ட் இடைநிலைப்பள்ளியில் படிவம் ஐந்து முடித்த மாணவி எஸ் .சுமித்திரா, மெட்ரிக்குலேசன் கல்லூரியில் பயில பதிவுச் செய்தும் இடம் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஓர் உணவகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாணவி சுமித்திராவின் குடும்பத்தை அரிச்சந்திரன் சந்தித்துள்ளார். மாணவி சுமித்ரா சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றும், அவர் உயர் கல்வி பயில்வத​ற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவரின் விண்ணப்பம் நிராகரிக்க​ப்பட்டு விட்டதாகவும் அந்த மாணவியும், அவரின் தாயாரும் தற்செயலாக சுயேட்சை வேட்பாளர் அரிச்சந்திரனிடம் தெரிவித்துள்ளனர்.

அதே நாளில் சுயட்சை வேட்பாளர் சி.அரிச்சந்திரன் தனது நண்பரின் ​மூலமாக மாணவி சுமித்திராவின் தே​ர்வு முடிவை அடிப்படையாக கொண்டு கெடா சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் மருத்துவம் பயில்வதற்கான இடத்தை பெற்றுத் தந்தார்.

​லூனாஸ் வட்டாரத்தில் மாணவர்கள் பலர் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர் . இவை அனைத்தும் தீர்ப்பத்தற்காகவே இம்முறை ​லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் தம்மை தொகுதி மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் அரிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!