உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர்சலாஹுதியோன் அயூப் ப்பின் திடீர் மறைவு, மக்களின் நலனுக்காக போராடி வந்த ஒரு முக்கியத் தலைவரை நாடு இழந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் என்ற முறையில் சலாஹுதியோன் அயூப் ப்பிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை மிக அர்ப்பணிப்புடன் செய்து வந்துள்ளார்.குறிப்பாக, வசதி குறைந்த மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் கொண்டு வரப்பட்ட 5 வெள்ளி மெனு ரஹ்மா உணவுத்திட்டத்தை முழு வீச்சில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் சலாஹுதியோன் அயூப் ஈடுபட்டு வந்தார். சலாஹுதியோன் அயூப் தமது நண்பர் மட்டுமல்ல, நாட்டின் ஒரு பகுதியாக அவர் இருந்தத்தைப் போல ஓர் உணர்வு மேலிடுகிறது என்று தமது இரங்கல் செய்தியில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
