Oct 23, 2025
Thisaigal NewsYouTube
மின்சாரக் கட்டண உயர்வு, முடிவு எடுக்கப்படவில்லை
அரசியல்

மின்சாரக் கட்டண உயர்வு, முடிவு எடுக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், டிச. 27-


2025 ஆம் ஆண்டில் தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று துணைப்பிரதமர் படில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.

தீபகற்ப மலேசியாவில் மின்சார சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான தெனாகா நேஷனல் பெர்ஹாட் இதுவரையில் எந்தவொரு பரிந்துரையும் முன்வைக்கவில்லை என்று எரிசக்தி, நீர் உருமாற்றத்துறை அமைச்சரான படில்லா யூசோப் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைப் போல் மின்சாரக் கட்டண உயர்வு, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை அனுமதிக்க இயலாது என்ற உறுதிபாடு கவனத்தில் கொள்ளப்படும் என்று படில்லா யூசோப் தெரிவித்தார்.

மேலும் இவ்விவகாரம் இன்னமும் ஆய்வில் இருப்பதையும் துணைப்பிரதமர் உறுதிப்படுத்தினார்.

Related News