Jan 9, 2026
Thisaigal NewsYouTube
உட்கட்சி பூசல்களைத் தவிர்த்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்: கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமரின் அரசியல் செயலாளர் வலியுறுத்து
அரசியல்

உட்கட்சி பூசல்களைத் தவிர்த்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்: கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமரின் அரசியல் செயலாளர் வலியுறுத்து

Share:

ஈப்போ, ஜனவரி.08-

ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளும், உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான முஹமட் கமீல் அப்துல் முனிம் வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறாது என்ற முடிவு தெளிவாக எடுக்கப்பட்டு விட்டதாகக், கூட்டணிக் கட்சிகளுக்குள் வீண் விவாதங்கள் வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம், ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே விடுத்த கோரிக்கையை விமர்சித்த ஜசெக.வின் இளைஞர் அணியான DAPSY, மலாக்கா ஆட்சிக் குழுவில் இருந்து அவர் விலக வேண்டும் என்று கூறியது.

இதனைத் தொடர்ந்து, நேற்று அக்மால் சாலே தனது முகநூல் பக்கத்தில், பதவி விலகுவது குறித்து சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த விவாதங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த முஹமட் கமீல், மடானி அரசாங்கத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகள் அரசியல் நிலைப்புத்தன்மையில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், நாட்டின் பொருளாதார மீள்திறனில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே வேளையில், பதவிக் காலம் முடியும் வரை, அம்னோவானது ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் என அக்கட்சியின் தலைவரான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்து விட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டு விட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

என்றாலும், மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து வெளியேற அக்மால் சாலேவுக்கு ஜசெக இளைஞர் அணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றது.

இதனையடுத்து, தொடச்சியாக இது போன்ற அரசியல் வாக்குவாதங்களால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை என முஹமட் கமீல் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத் தவறுகளை மீண்டும் செய்யாமல், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூட்டணிக் கட்சிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News