Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஹசான் கரீம் உறுதி: தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பிகேஆர் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்
அரசியல்

ஹசான் கரீம் உறுதி: தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பிகேஆர் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.22-

எதிர்வரும் 16-வது பொதுத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றாலும், பிகேஆர் கட்சிக்கு ஒருபோதும் இரண்டகம் செய்ய மாட்டேன் என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார். உடல்நலம் குன்றிய நிலையிலும் தடியூன்றியாவது கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தான் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடப் போவதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார். கட்சியின் தலைமைத்துவத்துடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நீதிக்கான போராட்டத்தைத் தொடரப் போவதாகவும், தலைவர்கள் மாறினாலும் கட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஹசான் கரீம் உறுதி: தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பிகேஆர்... | Thisaigal News