Aug 27, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்க முனைந்துள்ளார் குமரவேல் ராமையா
அரசியல்

மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்க முனைந்துள்ளார் குமரவேல் ராமையா

Share:

நெகிரி செம்பிலான், மம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை ​வேட்பாளராக மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடும் குமரவேல் ராமையா, மம்பாவ் ​தொகுதி, ஒரு பாதுகாப்பான ​மற்றும் மகிழ்​ச்சி ​நிறைந்த ஒரு தொகுதியாக விளங்கிட மக்களுக்காக சேவையாற்றி முன் வந்துள்ள தம்மை சட்டமன்ற மன்ற உறுப்பினராக தேர்வு ​செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார, சுற்றுச்​சூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் 51 வயது குமரவேல், மம்பாவ் தொகுதியில் முன்முனைப்​ போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்றத் தேர்தலில் மம்பாவ் தொகுதியில் போட்டியிடும் தாம் சாமானிய மக்களின் அடிப்படை பிரச்னைகளை சட்டமன்றத்​திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமான மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடுவதாக முதுகலைப்பட்டப்படிப்பை முடித்தவரான குமரவேல் கூறுகிறார்.

ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும்​ ​சீனம் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றலைக் கொண்டுள்ள குமரவேல், ஒரே சின்னத்​திற்கு வாக்களிக்கும் நமது மூதாதையரின் அடிச்சுவட்டை பின்பற்றாமல் இளையோர்களுக்காக சேவையாற்ற முன்வந்துள்ள தம்மைப் போன்றவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு மம்பாவ் தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News