கோலாலம்பூர், செப்டம்பர் 06-
வர்த்தக குற்றவியல் சம்பவங்களால் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து கடந்த செப்டம்பர் முதல் தேதி வரை 160 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றவியல் விசாரணைப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது தெரிவித்துள்ளார்.
நாட்டில் வர்த்தக குற்றவியல் தொடர்பில் நாள் ஒன்றுக்கு சராசரி 82 சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 68 லட்சம் வெள்ளி இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன என்பதே இதன் பொருளாகும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராம்லி முகமது இதனை குறிப்பிட்டார்.
இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 8 விழுக்காடு வர்த்தக குற்றவியல் சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் மொத்தம் 21 ஆயிரத்து 904 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.








