Jun 12, 2026
Thisaigal NewsYouTube
முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்
அரசியல்

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

Share:

கோலாலம்பூர், மே.18-

ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சிகள் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைத்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே 16-ஆவது பொதுத்தேர்தலை (GE16) நடத்த நேரிடும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

ஜோகூரில் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிட முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாக அம்னோ, பெர்சத்து மற்றும் டிஏபி ஆகிய முக்கியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அனைத்து நிலைகளிலும் தங்களது தேர்தல் இயந்திரத்தைப் பலப்படுத்தும் பணிகளை இக்கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ள வேளையில், தற்போதைய சூழலைக் கையாள்வதற்கான தங்களது தேர்தல் இயந்திரத்தின் திறன் குறித்து இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக அமானா கட்சி குறிப்பிட்டுள்ளது.

Related News