Aug 28, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்
அரசியல்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

Share:

கோலாலம்பூர், மே.18-

பிகேஆர் (PKR) கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உடனடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று டிஏபி (DAP) ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டோனி புவா சவால் விடுத்துள்ளார்.

ரஃபிஸி, நிக் நஸ்மி ஆகியோர் Parti Bersama Malaysia எனும் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, தங்களின் நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ஆனால், அவர்களை ஆதரிக்கும் மற்ற சில பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த பொதுத்தேர்தலில் மாற்றுக் கட்சியில் போட்டியிட எண்ணம் வைத்திருந்தும் தங்களின் எஞ்சிய மாதப் பதவிக் கொடுப்பனவுக்காக ராஜினாமா செய்யாமல் நீடிப்பது சுயநலமானது என்று டோனி புவா சாடியுள்ளார். மேலும், அத்தகைய தலைவர்களை வரவிருக்கும் தேர்தலில் வாக்காளர்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News