பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஓர் இக்கட்டான நிலையை சந்திக்க நேரிடும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். மலேசிய அரசியல் வடிவமைப்பில் சித்தாந்த ரீதியாக ஓர் இக்கட்டான நிலைமையை பிரதமர் எதிர்நோக்கக்கூடும். இது மலேசிய அரசியல் நீரோடையில் தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்று கைரி ஜமாலுடின் ஆருடம் கூறுகிறார். இந்த நெருக்கடியான சூழலில் அன்வார், தமது முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வாரா? அல்லது டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த பிற்போக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தப் போகின்றாரா? என்று கைரி ஜமாலுடின் வினவினார். தமது ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவை மேலும் திரட்டவதற்கான அன்வாரின் முன்னெடுப்புகள் பலன் அளிக்கவில்லை என்பதையே அண்மைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கைரி குறிப்பிட்டடார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


