Oct 19, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் பக்காத்தான் ஹாராப்பான், அம்னோ முடிவெடுக்கட்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் பக்காத்தான் ஹாராப்பான், அம்னோ முடிவெடுக்கட்டும்

சிலாங்கூர் ,ஆகஸ்ட் 06-

சிலாங்கூர்,கோத்தா ராஜா நாடாளுமன்றம் அல்லது அதிலுள்ள ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை, அம்னோ கோத்தா ராஜா தொகுதி தலைவர் செனட்டர் தெங்கு டத்தூஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் அஜீஸ் கோரியுள்ள விவகாரம்.

அது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை, சிலாங்கூர் பக்காத்தான் ஹாராப்பான் மற்றும் அம்னோ தலைமைத்துவத்திடம் விட்டுவிடுவதாக, அம்மாநில பிகேஆர் மற்றும் அமானா கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஒற்றுமை அரசாங்கத்தில், அம்னோ-வும் பக்காத்தான் ஹாராப்பான்-னும் அங்கம் வகிப்பதால், ஜஃப்ருல் அஜீஸ் -சின் கோரிக்கை குறித்து தீர ஆராய வேண்டியுள்ளதாக, சிலாங்கூர் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஹலிமி அபு பக்கர் கூறினார்.

அதே கூற்றை முன்வைத்துள்ள சிலாங்கூர் அமானா கட்சியின் தலைவர் இஜ்ஹாம் ஹாஷிம், ஜஃப்ருல் அஜீஸ் -சின் கோரிக்கையை பரிசீலிப்பது சிரமம் என்றாலும், உயர்மட்ட தலைமைத்துவத்தின் முடிவுக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்-  ஃபாஹ்மி கூறுகிறார்

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்- ஃபாஹ்மி கூறுகிறார்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்