Jan 18, 2026
Thisaigal NewsYouTube
Charles Santiago, SPAN தலைவராக நியமனம்
அரசியல்

Charles Santiago, SPAN தலைவராக நியமனம்

Share:

கிள்ளான் முன்னாள் எம்.பி. Charles Santiago, தேசிய குடிநீர் சேவை ஆணையமான SPAN தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி காலத்தில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் Charles Santiago, SPAN மின் தலைவராக பொறுப்பு வகித்தார்.

நாட்டின் குடிநீர் விநியோகச் சேவைக்கு முதன்மையான ஆணையமான SPAN மின் தலைவராக Charles Santiago நியமிக்கப்பட்டது மூலம் நடப்பு அரசாங்கத்தின் கீழ் ஜசெக. வை சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் அந்த உயர் பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Charles Santiago வின் பதவி காலம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News