கோலாலம்பூர், நவ. 12-
ரஹ்மா உணவுத் திட்டத்தை அரசாங்கம் நிறுத்தாது. மாறாக, இலக்குக்கு உரிய பகுதியில் அந்தத் திட்டத்தை அரசாங்கம் தொடரும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்சைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி தெரிவித்தார்.
5 வெள்ளியை உள்ளடக்கிய சிக்கன சாப்பாடான ரஹ்மா உணவு, இன்னமும் இலக்குக்குரிய மக்களின் தேர்வுக்குரிய உணவாக இருப்பால் அதன் இலக்கை அடையும் வரையில் அத்திட்டம் தொடரும் என்று அமைச்சர் விளக்கினார்.








