Oct 21, 2025
Thisaigal NewsYouTube
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியில் கணபதிராவ் சகோதரர் போட்டியிடக்கூடும்
அரசியல்

கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியில் கணபதிராவ் சகோதரர் போட்டியிடக்கூடும்

Share:

சிலாங்கூர் சட்டமன்றத்தேர்தலில் இந்தியர்களின் கவன ஈர்ப்புக்குரிய தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் கோத்தா கமுனிங் சட்டமன்றம் தொகுதியில் கிள்ளான் எம்.பி.யும். மாநில காபந்து அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ. கணபதிராவ் சகோதரர் போட்டியிடக்கூடும் என்று டிஏபி தலைவர் ஒரு கூறுகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கோத்தா கமுனிங் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சிலாங்கூர் மாநில டிஏபியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வீ. கணபதிராவின் சகோதரரும், ஷா ஆலாம் மாநகர் மன்ற உறுப்பினருமான V. Papparaidu வை ( வீ. பப்பாராயுடு ) தமது சகோதரர் தொகுதியில் களம் இறக்குவதற்கு டிஏபி முடிவு செய்துள்ளதாக அந்த தலைவர் கூறுகிறார்.

தமது சகோதரர் கணபதிராவைப் போலவே டிஏபியுடன் தமது அரசியல், ச​மூகவியல் பணியைத் தொடங்கியவரான வீ. பப்பாராயுடு, சிலாங்கூர் மாநில டிஏபி தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று, மாநில செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். ஷா ஆலாம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் என்று கூறப்படும் வீ. பப்பாராயுடு, வரும் தேர்தலில் கோத்தா கமுனிங் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறக்கப்படுவது கிட்டத்த​ட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!