கோலாலம்பூர், செப்டம்பர் 08
பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் இல்லாத அனைத்து உணவங்களும் Halal சான்றிதழை பெற வேண்டும் என்ற பரிந்துறையை கடுமையாக எதிர்க்கும் டி ஏ பி -யின் உதவித்தலைவர் திரெசா- கொக் -கை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தொணி லோக் இன்று தற்காத்துப் பேசினார்.
திரெசா கோக்- நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செபூத்தே தொகுதியில் முஸ்லீம் அல்லாத உணவக நடத்துனர்கள் அதிகமாக உள்ளனர். Halal சான்றிதழ் முறை கட்டாயமாக்கப்படுமானல் முஸ்லீம் அல்லாத உணவக நடந்துநர்களின் நிலை தொடர்பிலே திரெசா கோக்- தனது கவலையையும் / ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார் என்று அந்தோணி லோக் வாதிட்டார் . ஒரு எம். பி.என்ற முறையில் அவர் நிச்சமாக தனது கருத்தை தெரிவிக்க வேண்டியுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








