Sep 26, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே
அரசியல்

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே

Share:

சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு கூடுதலாக எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன என்பதையும், இரு மாநிலங்களுக்கும் மொத்த நாடாளுமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் வழங்கும் உறுதி உள்ளதா என்பதையும் புத்ராஜெயா தெளிவுபடுத்த வேண்டும் என சபா மாநில முன்னாள் முதலமைச்சர் சாலே சையிட் கெருவாக் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், சபா மற்றும் சரவாக்கிற்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டாலும் கூட, தீபகற்ப மலேசியாவிலும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் இரு மாநிலங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவ விகிதம் பெரிதாக மாறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உண்மையான பிரச்சினை எத்தனை தொகுதிகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன என்பது அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், இறுதியில் நாடாளுமன்றத்தின் மொத்த தொகுதிகளில் சபா மற்றும் சரவாக் எத்தனை சதவீதத்தைப் பெறுகின்றன என்பதுதான் முக்கியம் என்று சாலே சையிட் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

சபா மாநில அம்னோ பொருளாளருமான சாலே, சபா, சரவாக் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதா? அல்லது பெயரளவில் இரு மாநிலங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா? என்பதில் அரசாங்கம் தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்