எஸ்.பி.ஆர் எனப்படும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சலே கடந்த மே 9 ஆம் தேதி பதவி ஓய்வு பெற்ற பிறகு அவரின் இடத்தை நிரப்புவதற்கு புதிய வேட்பாளரை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
தேர்தலுக்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட்டு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்- மின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு மட்டுமே இன்னும் காத்திருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு ஆண்டுகளுக்கு எஸ்.பி.ஆர்-ரில் தலைவராக பதவி வகித்த அப்துல் கனி கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என்ற விதிமுறையினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் அன்வார் கூறினார்.
புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து துணை தலைவருடன் கலந்தாலோசிக்காமல் நாம் எப்போதும் விதிமுறையை பின்பற்றி செல்ல வேண்டும் என்றார் பிரதமர்.








