சிலாங்கூர், கின்ராரா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபியைச் சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் இங் சி ஹான் மீண்டும் களம் இறங்கியுள்ளார். சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கின்ராரா சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் இங் சி ஹான் , அத்தொகுதியில் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் வொங் யொங் காங் கிடம் நேரடிப் போட்டியை எதிர் நோக்கியுள்ளார். கடந்த இரண்டு தவணைக்காலமாக கின்ராரா தொகுதி மக்களின் அபரிமித ஆதரவைப்பெற்றுள்ள ஒரு பொறியிலாளரான 51 வயதுடைய இங் சி ஹான், கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து கின்ராரா தொகுதியை தற்காத்து வருகிறார். தமது அளப்பரிய சேவையினால் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிறகு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட வொங் யொங் காங்,கின்ராரா மக்களின் வளர்ச்சித்திட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளார் என்பதற்கான சிறப்பான பதிவை கொண்டுள்ளார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


