கோலாலம்பூர், நவம்பர்.24-
முன்னாள் பொருளாதார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான ரஃபிஸி ரம்லி, தனது முகநூலில் ஆகக் கடைசியாக வெளியிட்ட பதிவு, பலரது கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தாம் அரசியலில் சேர்வதற்குக் காரணமாக இருந்தது, நாட்டில் துடைத்தொழிக்க முடியாத ஒரு பிரச்னையாகத் தலைத்தூக்கிய லஞ்ச ஊழல் மீதான வெறுப்புதான் என்று ரஃபிஸி தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் மீதான வெறுப்பின் காரணமாகவே தாம் அரசியலில் ஈடுபட்டதாகவும், லஞ்ச ஊழல் இல்லையென்றால் எப்படி தொழில் செய்ய முடியும் என்று கூறுகின்ற சிலருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கியதாக ரஃபிஸி குறிப்பிட்டுள்ளார்.








