கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-
Gaza முனையில் இஸ்ரேலியர்களின் தாக்குதலினால் காயமுற்ற மேலும் அதிகமான பாலஸ்தீனர்களை மலேசியாவிற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்ற போதிலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தற்போதைய கவனம் ஏற்கனவே , மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 41 பாலஸ்தீனர்களை பூர்ணமாக குணப்படுத்துவதாகும்.
41 பாலஸ்தீனக்ளுக்கும் முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டு., உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்.அதன் பின்னரே அவர்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் ஆதீத கவனத்தை செலுத்தி வருவதாக என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.








