அலோர் ஸ்டார், செப்டம்பர்.15-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுமானால், நாட்டின் 11 ஆவது பிரதமர் பதவியைத் தாம் ஏற்கப் போவதில்லை என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் தெரிவித்தார்.
பிரதமர் பதவி மீது தமக்கு ஆர்வம் இல்லை என்று குறிப்பிட்ட ஹடி அவாங், பிரதமராக பொறுப்பேற்கக்கூடியவர் படித்தவராக, உடல் ரீதியில் வலிமை மிகுந்தவராக, நம்பகத்தன்மை நிறைந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எனினும் தகுதி உள்ள ஒருவரைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, வெற்றி பெறுவதில் பாஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.