Aug 27, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் அக்மால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
அரசியல்

டாக்டர் அக்மால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.14-

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிலிருந்து விலகுவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ள டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டதாக பேராளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ பேராளர் மாநாடு தொடங்கிய வேளையில் அக்மாலுடன் நேற்று நேரடியாக இந்த சந்திப்பை நடத்திய அஹ்மாட் ஸாஹிட், இந்த ஆலோசனையைக் கூறியதாக மாநாட்டில் கலந்து கொண்ட அந்த பேராளர் தெரிவித்தார்.

எனினும் அக்மால் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக மலாக்காவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பேராளர் தெரிவித்துள்ளார்.

Related News