Dec 20, 2025
Thisaigal NewsYouTube
மாநகர் மன்ற உறுப்பினர்களாக 48 பேர் நியமனம்
அரசியல்

மாநகர் மன்ற உறுப்பினர்களாக 48 பேர் நியமனம்

Share:

பினாங்கு, ஜன.4-


பினாங்கு மாநகர் மன்றம் மற்றும் செபராங் பிறை மாநகர் மன்றம் ஆகியவற்றில் 5 புதிய முகங்கள் உட்பட மொத்தம் 48 பேர் மாநகர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு மாநகர் மன்றத்திற்கும், செபராங் பிறை மாநகர் மன்றத்திற்கும் தலா 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்

செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினராக லிங்கேஸ்வரன் சர்மார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு மாநகர் மன்றங்களுக்கும் நியமிக்கப்பட்ட 48 மாநகர் உறுப்பினர்களில் 20 பேர் டிஏபி.-யை சேர்ந்தவர்கள் ஆவர்.

17 பேர் பிகேஆர், 6 பேர் அமானா , 3 பேர் பாரிசான் நேஷனல் இருவர் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Related News