கோலாலம்பூர், நவ. 21-
மனித வள அமைச்சின் கீழ் உள்ள மனிதவள மேம்பாட்டு நிதியகமான எச்.ஆர்.டி. கோர்ப்பில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு வழிவிடும் வகையில் விடுப்பில் சென்ற அந்த நிதியகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமிட் ஷேக் டாவூட், மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டதை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று உறுதிப்படுத்தினார்.
லஞ்ச ஊழல் ஆணையத்தின் விசாரணைக்காக ஷாகுல் ஹமிட் விடுப்பில் செல்ல அனுதிக்கப்பட்டதாக ஸ்டீவன் சிம் விளக்கினார்.
ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி ஆவார். எச்.ஆர்.டி. கோர்ப் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் இதுவரை யாரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்தார்.








