கோத்தா கினபாலு, நவம்பர்.24-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலையொட்டி நாளை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறுகிறது. முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பில், 24 ஆயிரத்து 426 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.
முன்கூட்டியே வாக்களிப்பவர்களில் 11 ஆயிரத்து 697 பேர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளும், 12 ஆயிரித்து 729 பேர் போலீசார் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளும் ஆவர்.
நாளை காலை 8 மணியளவில் சபா மாநிலம் முழுவதும் 58 மையங்களில் முன்கூட்டியே வாக்குப் பதிவு டைபெறும்.
இந்த வாக்களிப்பு மையங்கள் யாவும், போலீஸ் தலைமையகம் மற்றும் இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே பதிவு செய்யப்படும் வாக்குகள், வரும் 29 ஆம் தேதி நடைபெறும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு பெற்றப் பின்னர் ஒருங்கிணைந்து எண்ணப்படும் என்று எஸ்பிஆர் அறிவித்துள்ளது.
சபா சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் இம்முறை 73 தொகுதிகளில் 596 பேர் போட்டியிடுகின்றனர். பல தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஆர் தெரிவித்துள்ளது.








