பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் வெற்றிக்கு பின்னர் இரண்டாவது தவணையாக தாம் முதலமைச்சராக பதவியேற்பதை தடுப்பதற்கு இப்போதே சதி வேலைகள் நடந்த வருவதாக கூறப்படுவதை மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சொவ் கொன் யொவ் மறுத்துள்ளார். தாம் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பதை விரும்பாத குறிப்பட்ட கும்பல், அதனை தடுப்பதற்கு தற்போது களம் இறங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சொவ் கொன் யொவ் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு புதியவர்களை கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து மட்டுமே தமது கவனத்தில் இருப்பதாக 65 வயதான சொவ் கொன் யொவ் தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


