ஆறு மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிளந்தான்,திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை பெரிக்காத்தான் நேஷனல் தற்காத்துக்கொண்ட அதேவேளையில் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த ஆறு மாநிலங்களின் தேர்தலில் மக்கள் தங்கள் விரும்புரிமையையும் முடிவையும் தெரிவித்துள்ளனர். இந்த முடிவை மதிக்கிறோம். ஏற்றுக்கொள்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்தப் பின்னர் கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் இதனை தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிட்ட அனைத்த கட்சிகளும், தேர்தலுக்கு பிறகு நாட்டின் அமைதியை கட்டிக்காப்பதுடன் இனி மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு பிரதமர் கேட்டுக்காண்டர். தேர்தல் காலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேலோங்கியிருந்தது. தற்போது தணிந்து விட்டது. இன மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் கனிந்து விட்டது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








