Oct 29, 2025
Thisaigal NewsYouTube
இரு எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை
அரசியல்

இரு எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை

Share:

அக்டோபர் 23-

நாடாளுமன்ற அவையில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள், கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது தொடர்பில் அவ்விருவரும், நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சைக்குழுவின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்று Kampar எம்.பி. Chong Zhemin இன்று வலியுறுத்தினார்.

தமிழில் அந்த ஆபாச வார்த்தையை பெரிக்காத்தான் நேஷனலின் உலு திரெங்கானு எம்.பி. Rosol Wahid பயன்படுத்தியுள்ளார்.

அதேவேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிறுமைப்படுத்தும் வகையில் Pasembur Mamak- வியாபாரியுடன் ஒப்பிட்டு பெரிக்காத்தான் நேஷனல் அலோர்ஸ்டார் எம்.பி. Afnan Hamimi Tain Azamudden பேசியுள்ளார்.

மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய நாடாளுமன்ற அவையில் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டிய எம்.பி.க்கள் நாலாந்தர வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

அவர்களின் இந்த நடவடிக்கை, சம்பந்தப்பட்டவர்களை மட்டுமின்றி நாடாளுமன்ற அவைக்கே இழுக்கை ஏற்படுத்தியுள்ளனர் என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயருடன் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் Chong Zhemin இதனை தெரிவித்தார்.

Related News