Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் மலாக்கா மாநில ஜசெக-வின் தலைவராகத் தேர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் மலாக்கா மாநில ஜசெக-வின் தலைவராகத் தேர்வு

நவ. 24-

கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் Khoo Poay Tiong, 2024-2027 ஆண்டுக்கான ஜசெக கட்சியின் மலாக்கா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் மாநில செயலாளராக Kesidang சட்டமன்ற உறுப்பினர் Allex Seah Shoo Chin நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று மாலை, போட்டியின்றி வெற்றி பெற்ற 15 மாநிலக் குழு உறுப்பினர்கள் கூடி, தாங்கள் வகிக்கும் பதவிகள் குறித்து விவாதித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Khoo Poay Tiong கூறினார்.

இதற்கிடையில், முன்னாள் Gadek சட்டமன்ற உறுப்பினர் G Saminathan , மாநில துணைத் தலைவராக தொடர்ந்து நிலைத்திருப்பார் என்றும், Banda Hilir சட்டமன்ற உறுப்பினர்கள் Leng Chau Yenஉம் எஸ் சந்தருவும் துணைத் தலைவர்களாக நீடிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →