Jun 25, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய எரிபொருள்  நெருக்கடி: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் அன்வார் அவசர ஆலோசனை
அரசியல்

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் அன்வார் அவசர ஆலோசனை

Share:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் எரிபொருள் நெருக்கடி குறித்து விவாதிக்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் மந்திரி பெசார்கள் மற்றும் முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், மின்சார விநியோகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துதல் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும் கூட்டாகச் செயல்பட இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மாநில அரசுகளுடன் இணைந்து எரிபொருள் மாற்றத் திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

Related News