Oct 23, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் நிலைத்தன்மையை உருவாக்குவதில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி
அரசியல்

அரசியல் நிலைத்தன்மையை உருவாக்குவதில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி

Share:

கோலாலம்பூர், டிச. 27-


கடந்த இரண்டு வருடங்களாக நாட்டை வழிநடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கம், அரசியல் நிலைத்தன்மையை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், ஷெரட்டன் நகர்வின் விளைவாக ஏற்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை கொண்டு வருவதில் கடந்த இரண்டு வருடங்களில் ஒற்றுமை அரசாங்கம் பெரும் பங்களிப்பை வழங்கியிருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளருமான சைபுடின் குறிப்பிட்டார்.

ஆட்சியை கவிழ்ப்பதும், ஆட்சியை கைப்பற்றுவதும் பிரதான அ ரசியல் மூலதனமாக கொண்டு அரசியல் நடத்தி வந்த எதிர்க்கட்சிகளின் தொனி, கடந்த இரண்டு வருடங்களாக குறைந்து இருப்பதையும் சைபுடின் சுட்டிக்காட்டினார்.

அரசியல் நகர்விற்கான மூலதனத்தை இழந்தவர்களாக காணப்படும் எதிர்க்கட்சியினர், வேறு வழியின்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை குறி வைத்து, எதற்காக அதிகம் பயணம் செய்கிறார், எதற்காக உதவித் தொகையை மீட்டுக்கொண்டுள்ளார், ஐநா மாநாட்டில் ஏன் கலந்து கொள்ளவில்லை போன்ற உபரிக் கேள்விகளைதான் தற்போது அதிகமாக முன்வைத்து வருகின்றன என்று சைபுடின் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பது, கைப்பற்றுவது முதலிய கவனத்திலிருந்து எதிர்க்கட்சியினர் விலகி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது என்று சைபுடின் விளக்கினார்.

Related News