பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்து
இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டுமானால் இந்திய சமுதாயத்தை சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஒரே இலக்கை நோக்கி ஒன்றுப்பட்டு இருப்பது அவசியமாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய சமூகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருமித்த கருத்துடன் இருப்பது மூலம் இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகள் ஆக்கப்பூர்வமாகவும், மிக எளிதாகவும் அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியாக நாம் மாறுப்பட்ட கருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்டு இருப்பது இயல்பானது. ஆனால், சமுதாயம் என்று வரும் போது நம்முடைய அனைத்து வகையான கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு, சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்று இணைய வேண்டும். அப்போதுதான் சமுதாயத்திற்காக முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகள் அனைத்தும் எளிதாக அமையும் என்று இந்திய சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
“இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாடு மற்றும் அதன் எதிர்காலத்தின் இலக்கு” என்ற தலைப்பில் இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் அன்வார் இதன வலியுறுத்தினார்.. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் Fadhilina sidek, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.. விக்னேஸ்வரன், இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உறுமாற்றுப் பிரிவான மித்ராவின் சிறப்புப்பணிக்குழுத் தலைவர் டத்தோ ரா. ரமணன் உட்பட ஆசிரியர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.