Jun 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை
அரசியல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

Share:

கோலாலம்பூர், மே.03-

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் நிலவி வரும் அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, அம்னோவும் நம்பிக்கைக் கூட்டணியும் அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார். மாநில அரசில் கட்சிகளின் நிலைப்பாட்டையும் கொள்கை சார்ந்த முரண்பாடுகளைக் களைவதற்கும் இரு தரப்பும் அமர்ந்து பேச வேண்டும் என்ற அம்னோ அரசியல் பணியகத்தின் முடிவைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தின் உடன்படிக்கைபடியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், மாநிலத்தின் தலைமைத்துவம், நிர்வாக அமைப்புகள் தொடர்பான ஆலோசனைகளும் இதில் இடம் பெறும் என்று குறிப்பிட்டார்.

Related News