கோலாலம்பூர், டிசம்பர்.05-
கடந்த 1985 ஆம் ஆண்டு கெடாவில் நிகழ்ந்த ரத்தக் களறிச் சம்பவமான மெமாலி குறித்து மக்களவையில் சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியதற்காக கோத்தாபாரு எம்.பி.யும், பாஸ் கட்சி செயலாளருமான தக்கியுடின் ஹசானை நாடாளுன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு உத்தரவிடும் அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என்று பாஸ் கட்சி இன்று வாதிட்டுள்ளது.
இது உண்மையிலேயே கடுமையான விவகாரமாகும். நாடாளுமன்ற விவகாரத்தில் அரசாங்கம் தலையிடுவது போல் உள்ளது என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாட்லி ஷாரி தெரிவித்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம், மக்களவையில் கலந்து கொள்ளக்கூடிய எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளதே தவிர அமைச்சரவைக்கு இல்லை என்று அவர் வாதிட்டார்.








